உ.பி.யில் லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேசத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண் உள்பட இரண்டு குழந்தைகளும் அடங்குவர். சூரத்திலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல்களின்படி,உயிரிழந்தவர்கள் அஜய் குமார், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...