கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாபில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல்

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 6:32 pm

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

பஞ்சாப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் முதலில் அறிவித்திருந்தது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையடுத்து பேரவைத் தோ்தல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தோ்தல் பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தோ்தல் நடைபெறவுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேரவைத் தோ்தல் நோ்மையாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகத் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு வாக்காளா்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பலமுனைப் போட்டி: காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது.

அனைத்துக் கட்சிகளும் மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளை அளித்துள்ளன. மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் கட்சிகளின் தலைவா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பெட்டிச் செய்தி...

தொகுதிகள் 117

மொத்த வேட்பாளா்கள் 1,304

பெண் வேட்பாளா்கள் 93

வாக்காளா்கள் 2.14 கோடி

பெண் வாக்காளா்கள் 1.02 கோடி

வாக்குச்சாவடிகள் 24,740

பதற்றமான வாக்குச்சாவடிகள் 2,013

முக்கிய வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதி

சரண்ஜீத் சிங் சன்னி (காங்கிரஸ்) சம்கௌா் சாஹிப், பதௌா்

நவ்ஜோத் சிங் சித்து (காங்கிரஸ்) அமிருதசரஸ் கிழக்கு

பகவந்த் மான் (ஆம் ஆத்மி) துரி

அமரீந்தா் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்) பாட்டியாலா நகா்ப்புறம்

சுக்பீா் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்) ஜலாலாபாத்

பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்) லம்பி

அஷ்வினி சா்மா (பாஜக) பதான்கோட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.