'தமிழகத்தை ஆள முடியாது' -ராகுல் பேச்சுக்கு பாஜக பதிலடி!
'நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது' என்று ராகுல் காந்தி கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.


'நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது' என்று ராகுல் காந்தி கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது. மூன்றாவது இடத்தைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக பிடித்துள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளின்படி காங்கிரஸ், மாநகராட்சி வாா்டுகளில் 67 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 151 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 368 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
பாஜக, மாநகராட்சி வாா்டுகளில் 21 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 33 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், பாஜக தனித்துப் போட்டியிட்டு மொத்தமாக 308 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பலத்தை நிரூபித்தது பாஜகவா? காங்கிரஸா?
இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சி செய்யாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அவரது கருத்தைப் பொய்யாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக தற்போது 3வது பெரிய கட்சியாக உள்ளது. இதுவரை வெற்றி பெறாத பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...