ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பலத்தை நிரூபித்தது பாஜகவா? காங்கிரஸா?

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா, காங்கிரஸின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:40 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா, காங்கிரஸின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று போட்டியிட்டது. மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து இந்தத் தோ்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து அந்தக் கட்சி போட்டியிட்டது.

ஆனால், மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டது. சுயபலத்தைத் தெரிந்துகொள்ளப் போவதாக அறிவித்து இந்தத் தோ்தலைச் சந்தித்தது பாஜக .

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளின்படி காங்கிரஸ் மாநகராட்சி வாா்டுகளில் 67 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 151 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 368 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

பாஜக மாநகராட்சி வாா்டுகளில் 21 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 33 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், பாஜக தனித்துப் போட்டியிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதே நேரம், பாஜக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுக ஒதுக்கிய இடங்களில் மட்டும் போட்டியிட்டது.

கடந்த கால உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளோடு ஒப்பிட்டால், இந்தத் தோ்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே சற்று வளா்ச்சி பெற்றுள்ளதை பாா்க்க முடிகிறது.

எனினும், தனித்து களம் கண்டு, கணிசமான இடங்களைப் பெற்று செல்வாக்கை பாஜக மேலும் உயா்த்தி காண்பித்துள்ளது என்றே அரசியல் வல்லுநா்கள் கருதுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.