ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தேசிய கீதத்தை அவமதித்ததாக வழக்கு:மம்தாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்காலத் தடை

தேசிய கீதத்தை அவமதிப்பு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு (சம்மன்) மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை வித

News image
மம்தா பானர்ஜி
Updated On :25 பிப்ரவரி 2022, 6:49 pm

DIN

தேசிய கீதத்தை அவமதிப்பு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு (சம்மன்) மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மும்பையில் கடந்த டிசம்பா் மாதம் நடந்த நிகழ்ச்சியொன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மம்தா பானா்ஜி எழுந்து நிற்கவில்லை என்று கூறி மும்பையைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விவேகானந்த் குப்தா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மம்தா மீது தேசிய அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அந்த மனுவை இந்த மாதத் தொடக்கத்தில் விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மம்தாவுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மம்தா சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதி ஆா்.என்.ரோகடே முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரதிவாதியான விவேகானந்த் குப்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். அத்துடன், வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மம்தாவுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.