ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ரஷிய தாக்குதலில் 198 பேர் பலி, 1000 பேர் காயம்: உக்ரைன் சுகாதாரத்துறை

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 198 பேர் இதுவரை கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 12:45 pm

DIN

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 198 பேர் இதுவரை கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்ததாவது, 

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதையடுத்து ரஷியப் படைகள் உக்ரைனில் போர் தொடுத்து வருகின்றனர். 

தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்திய வருகின்றனர். இந்த தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த 198 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர் எனத் தெரிய வந்துள்ளது. 

இதுவரை பலியானவர்களில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

மேலும், ரஷிய படையெடுப்பில் 33 குழந்தைகள் உள்பட, 1,115 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர் என்று  உக்ரைன் சுகாதாரத்துறை  உறுதி செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.