தில்லியில் கரோனா வழிகாட்டுதல்கள் மீறல்: ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளது. 
தில்லியில் கரோனா வழிகாட்டுதல்கள் மீறல்: ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளது தில்லி அரசு. 

தேசியத் தலைநகரில் தில்லியில் ஒமைக்ரான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

"ஜனவரி 2 ஆம் தேதி தில்லி அரசின் அமலாக்க முகமையால் மொத்தம் 5,066 கரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்கள் அடையாளம் காணப்பட்டமீறிர்,  அவர்களிடம் இருந்து ரூ.1,00,15,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 45 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக" தில்லி அரசு அதிகாரிகள் கூறினர். 

இதில், கரோனா வழிகாட்டுதல்களை மீறியதாக வடக்கு தில்லியில் 735 வழக்குகளும், மத்திய தில்லியில் 647 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஜனவரி 1 ஆம் தேதி, தில்லி அரசாங்கத்தின் அமலாக்க நிறுவனம் கரோனா வழிகாட்டுதல்களை மீறியவர்களிடமிருந்து சுமார் ரூ.99 லட்சம் அபராதம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மே 20, 2021க்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பாதிப்பாக புதிததாக 3,194 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, தேசிய தலைநகரில் தொற்று பாதிப்பு விகிதம் 4.59 சதவிதமாக உயர்ந்துள்ளது. இன்று தொற்று பாதிப்பு விகிதம் 6.5 சதவிதமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைநகரில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 14,54,121 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,397 ஆகவும், அவர்களில் 4,759 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com