மகாராஷ்டிரத்தில் 36 ஆயிரம் பேருக்கு கரோனா: மும்பையில் மட்டும் 20 ஆயிரம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 36,265 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 36,265 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 36,265 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 8,907 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,14,847 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லியில் ஒரே நாளில் 15,097 பேருக்கு கரோனா பாதிப்பு
ஒமைக்ரான்:
இதுதவிர மேலும் 79 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது. இதில் 381 பேர் குணமடைந்துவிட்டனர்.
மும்பை:
மும்பையில் மட்டும் புதிதாக 20,181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 79,260 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...