மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம்: இரவு ஊரடங்கு நேரம் நீட்டிப்பு, கட்டுப்பாட்டை மீறினால் ரூ.25,000 அபராதம்

ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2022, 11:28 am

ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் நாளை (ஜன.8) முதல் அமலில் இருக்கும்.

அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.  அத்தியாவசிய சேவைகள், அலுவலகங்களில் இரவுநேர பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், கட்டுப்பாட்டை மீறி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.