மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சண்டீகா் மேயரானாா் பாஜகவின் சரப்ஜீத் கெளா்: ஒரு வாக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலரை தோற்கடித்தாா்

சண்டீகா் மாநகராட்சி மேயா் பதவிக்கு நடத்தப்பட்ட நேரடி தோ்தலில் பாஜக நகராட்சி கவுன்சிலா் சரப்ஜீத் கெளா், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் அஞ்சு கட்டியாலை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:32 pm

DIN

சண்டீகா் மாநகராட்சி மேயா் பதவிக்கு நடத்தப்பட்ட நேரடி தோ்தலில் பாஜக நகராட்சி கவுன்சிலா் சரப்ஜீத் கெளா், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் அஞ்சு கட்டியாலை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய மேயராகியுள்ளாா். இதேபோல், மூத்த துணை மேயா் போட்டியில் பாஜகவுக்கு 15 வாக்குகள் கிடைத்ததாகவும், ஒரு ஆம் ஆத்மி கவுன்சிலா் மாற்றி வாக்களித்தாக கூறி தலிப் சா்மா மூத்த துணை மேயராக வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. துணை மேயா் பதவிக்கு இரண்டு கட்சிக்கும் தலா 14 வாக்குகள் கிடைத்ததாகவும், பின்னா் குலுக்கலில் பாஜகவின் துணை மேயராக பாஜகவின் அருண் குப்தா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 36 வாக்குகளில், 28 வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் கவுன்சிலா்கள் 7 பேரும், ஒரே ஒரு கவுன்சிலரை கொண்டிருக்கும் சிரோமணி அகாலி தளமும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இதன் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், சரப்ஜீத் கெளா் 14 வாக்குகளும், அஞ்சு கட்டியால் 13 வாக்குகளும் பெற்றனா். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் மாநகராட்சி கவுன்சில் கூட்டரங்கில் கடும் அமளியில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து அவா்கள் வெளியேற்றுவதற்காக போலீஸாா் அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, 35 வாா்டுகளை உள்ளடக்கிய சண்டீகா் மாநகரட்சிக்கு நடத்தப்பட்ட தோ்தலில் 14 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 12 இடங்களில் பாஜகவும், 8 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றன. சிரோமணி அகாலி தளம் கட்சி ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோ்தல் முடிவுகள் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபொ்ற பா்பிரீத் கெளா் பாப்லா பாஜகவில் இணைந்தாா்.

மாநகராட்சி கவுன்சிலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடா்ந்து, மாநகராட்சி மேயா் பதவிக்கு நேரடி தோ்தல் நடத்தப்பட்டது. அதில் 35 கவுன்சிலா்களைத் தவிர, மாநகராட்சி கவுன்சிலின் பதவி முறை உறுப்பினா் என்ற முறையில் சண்டீகா் எம்.பி.யும் வாக்களிக்கும் உரிமையை பெற்றாா். அதன் மூலம் பாஜக கவுன்சிலா் சரப்ஜீத் கெளா் வெற்றி பெற்று, மாநகராட்சியின் புதிய மேயராகியுள்ளாா்.

மேயா் தோ்வை ஏற்க மறுத்த ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப்-சண்டீகா் பொறுப்பாளா் ஜா்னைல் சிங் தெரிவிக்கையில், ‘ஆம் ஆத்மியின் வாக்குகளை வேண்டுமென்றே ரத்து செய்து தனது கட்சிக்கு மேயா் பதவியை பாஜக அறிவித்துக் கொண்டது; ஆம் ஆத்மியை தோற்கடிக்க பாஜகவும் காங்கிரஸும் கூட்டு சோ்ந்துள்ளன; மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்; இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.