பஞ்சாப்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
பஞ்சாபில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.


பஞ்சாபில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் குழு கடந்த வியாழக்கிழமை வேட்பாளர்களை இறுதி செய்த நிலையில், 86 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் பெண் வேட்பாளர்கள் 9 பேர். ஏறத்தாழ 10 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 40 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உ.பி.தேர்தல்: முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டி
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என கட்சி முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும் பிரசாரக் குழுவின் தலைவருமான சுனில் ஜகார் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது உறவினர் சந்தீப் ஜகாப் அபோகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, பஞ்சாப் அமைச்சர் பிராம் மோஹிந்த்ரா தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது மகன் மோஹித் மோஹிந்த்ரா போட்டியிடுகிறார்.
முதல்வர் சரண்ஜித் சன்னி சம்கௌர் சாஹிப் தொகுதியிலும், நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிருதசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதியிலேயே போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...