மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி: குடியரசு தின அணிவகுப்பைக் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி

தில்லியில் இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜனவரி 2022, 10:29 am

தில்லியில் இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 73-வது குடியரசு தினம் வருகிற ஜன.26 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காண இந்தமுறை 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்படுவார்கள். 

இதில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 19,000 பேர் அரசு சார்பில் அழைக்கபட்டுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு 1.25 லட்சம் பேரும், 2021-ல் 25,000 பேரும் குடியரசு தின அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.