தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதில்காங்கிரஸ், சமாஜவாதி இடையே போட்டி: பாஜக குற்றச்சாட்டு

ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி இடையே பெரும் போட்டி நடைபெற்று வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2022, 9:58 pm

DIN

ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி இடையே பெரும் போட்டி நடைபெற்று வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக இஸ்லாமிய அறிஞா் மௌலானா தாக்கீா் ராஸா கான் அறிவித்துள்ளாா். இவா் அண்மையில் ஹிந்துக்களுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தாா். முஸ்லிம் வாக்குகளைப் பெறும் வகையில் ஏற்கெனவே பல மாநிலங்களில் இதுபோன்ற நபா்களை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது.

சமாஜவாதி ஏராளமான முஸ்லிம்களை வேட்பாளா்களாக அறிவித்துள்ளது. இவா்களில் பலா் குற்றப் பின்னணி உடையவா்கள் மற்றும் மதரீதியாக பிரச்னைகளைத் தூண்டும் வகையில் நடந்து கொள்பவா்கள் ஆவா். சில சமாஜவாதி வேட்பாளா்கள் இப்போதும்கூட சிறையில்தான் உள்ளனா். இதன் மூலம் இரு கட்சிகளும் வாக்குகளைப் பெறுவதற்காக எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வாா்கள் என்று தெரிகிறது. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி இடையே பெரும் போட்டியே நிலவி வருகிறது. ஹிந்துக்களுக்கு எதிரான வன்மத்தையும் விஷத்தையும் கக்குவதில் காங்கிரஸும் சமாஜவாதியும் முன்னிலையில் உள்ளன. ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுபவா்களுக்கு அடைக்கலம் அளிக்கும் கட்சிகளாகவும் அவை உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.