பெரும்பான்மை வார்டுகளை பிடித்த பாஜக; கூட்டணியால் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றிய சிவசேனை
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சில வார்டுகளில் தனியாக போட்டியிட்டன.


மகாராஷ்டிராவில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. நகர பஞ்சாயத்து, அரசு அமைப்புகள் என மொத்தம் 106 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
வெளியான முதற்கட்ட முடிவுகளில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 24 பஞ்சாயத்துகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பாஜக 22 பஞ்சாயத்துகளையும் காங்கிரஸ் 18 பஞ்சாயத்துகளையும் சிவசேனை 14 பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் கூட்டணி அமைத்தும் சில இடங்களில் தனியாகவும் போட்டியிட்டன. இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளை கைப்பற்றி ஆளும் கூட்டணி பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
இதையும் படிக்க | பட்ஜெட்: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மொத்தமுள்ள 1,802 வார்டுகளில் 379 வார்டுகளில் வெற்றிபெற்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதுவரை, 1,683 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 359 வார்டுகளை தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சிவசேனை 297 வார்டுகளிலும் காங்கிரஸ் 281 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...