உ.பி.யில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும்: துணை முதல்வர்
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
"ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை காங்கிரஸ் எதிர்க்கும். இதன்மூலம், அவர்கள் ஊழலுக்கு ஆதரவானர்கள் என்பது வெளிப்படுகிறது. அகிலேஷ் யாதவ் வளர்ச்சியைப் பற்றி பேசுவார்.
இதையும் படிக்க | கோவா பாஜக வேட்பாளர்கள்: 4 பேர் மீது குற்றவியல் வழக்கு
வளர்ச்சிக்காக அவர் பங்களித்த எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவருக்கு சவால் விடுக்கிறேன். அவர் மணிப்பூர் கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கேள்விபட்டோம். முக்கியமானத் தொகுதியில் போட்டியிடுவதற்குக்கூட அவருக்கு தைரியம் கிடையாது.
தேர்தலில் அவருக்கு பாஜக கடுமையான போட்டியைத் தரும். அதன்பிறகு, அவர் சைக்கிள் ஓட்டுவதற்கே மறந்துவிடுவார்.
பாஜகவைப் போல எந்தவொரு கட்சியும் வளர்ச்சிக்காகப் பணியாற்றியிருக்காது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...