
புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.
மேலும், திறன்களை வெற்றிகரமாக நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதிப்படுத்தியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்த பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.