மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் அறையில் இருந்த பாம்பை பாம்பு பிடி வீரர் ஒருவர் கையால் பிடித்து மீட்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருப்பவர் என். ஆர். போர்க்கர். நீதிமன்றத்தில் உள்ள இவரது அறையில் பாம்பு ஒன்று இன்று காலை பிடிக்கப்பட்டது. இது விஷ பாம்பா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. கரோனா காரணமாக, சில வழக்குகள் மட்டுமே நேரடியாக நடத்தப்பட்டுவருகிறது.
மீதமுள்ள வழக்குகள் இணைய வழியாக நடைபேற்றுவருவதால், நீதிமன்றத்தில் கூட்டம் காணப்படவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில், நீதிபதியின் அறை வெளியே பிடிக்கப்பட்ட பாம்பை பாம்பு பிடி வீரர் கையால் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், சுற்றி நீதிமன்ற அலுவலர்கள் உள்பட பலர் அவரை சுற்றி நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்திலிருந்து இணைய வழியாக வழக்குகள் விசாரிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், நீதிமன்றங்களில் வாதாட வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கு தொடர்பவர்கள், நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராகும்படி கேட்டு கொள்ளும்பட்சத்தில் மட்டும்தான் அவர்கள் நீதிமன்றத்தில் அனுமதிப்படுகின்றனர்.
இதற்கு மத்தியில், ஜனவரி 24ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.