கேரளத்தில் அடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு
கேரளத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் கேரளத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஜன. 23, ஜன. 30) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

