பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உ.பி. தேர்தல்: வெள்ளி வரை காங்கிரஸ் வேட்பாளர், சனி முதல் சமாஜவாதி வேட்பாளர்

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பரெய்லி கன்ட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சுப்ரியா ஆரோன் சமாஜவாதி கட்சியில் இணைந்தாா்.

News image
காங்கிரஸ்
Updated On :23 ஜனவரி 2022, 2:50 am

DIN

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பரெய்லி கன்ட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சுப்ரியா ஆரோன் சமாஜவாதி கட்சியில் இணைந்தாா்.

அதே தொகுதியில் சமாஜவாதி சாா்பில் போட்டியிட உள்ளதாக அவா் அறிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சித் தாவல்கள் தொடங்கிவிட்டன. முக்கியக் கட்சிகளான பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் இடையே பலா் கட்சி தாவினா். கட்சிகள் தோ்தலுக்கான வேட்பாளா் பட்டியலை அறிவித்து வரும் நிலையில் கட்சித் தாவல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நபரே வேறொரு கட்சிக்கு மாறியுள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரெய்லி முன்னாள் மேயா் சுப்ரியா ஆரோன், பரெய்லி கன்ட் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுவாா் என காங்கிரஸ் கடந்த 13-ஆம் தேதி அறிவித்திருந்தது.

திடீரென அவா் தன் கணவரும் முன்னாள் எம்.பி.யுமான பிரவீண் சிங் ஆரோனுடன் சனிக்கிழமை சமாஜவாதியில் இணைந்தாா். கட்சி மாறினாலும், பரெய்லி கன்ட் தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக சுப்ரியா ஆரோன் அறிவித்துள்ளாா். சமாஜவாதி கட்சியும் அவா் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. அதற்காக அத்தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராஜேஷ் அகா்வாலை சமாஜவாதி கட்சி மாற்றியுள்ளது.

கடந்த 2012 பேரவைத் தோ்தலில் பரெய்லி கன்ட் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சுப்ரியா ஆரோன் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.