வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மகாத்மாவின் விருப்பத்துக்குரிய பாடல் குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கம்

குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெறும் பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 7:32 pm

குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெறும் பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ பாடல் இசைக்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் தில்லிக்கு வருவது வழக்கம். ஜனவரி 29-ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும். அன்றைய தினம் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் தில்லிக்கு வந்த பாதுகாப்புப் படைகளை தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இதுவே பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி என்றழைக்கப்படுகிறது.

தில்லி விஜய் செளக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய ‘என்னுடன் இருங்கள்’ பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பிரிட்டனில் பிறந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ஆம் ஆண்டுமுதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வாண்டு பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய புகழ்பெற்ற ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (ஒட்டுமொத்த உலகத்தையும்விட மேலானது இந்தியா) பாடல் இசைக்கப்படவுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.