பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகர்!

பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை அமைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகர் வலியுறுத்தினார்.

14-08-2024: KOCHI: Economist Parakala Prabhakar in an interaction programme on The state of Indian Economy, organised by Congress at Sabarmati Hall in

பரகலா பிரபாகர் - ENS

Published On :

தமிழக சட்டப்பேரவையில் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ கூட இருக்கக் கூடாது என்ற கொள்கை மிகவும் முக்கியம், அந்த கொள்கை பக்கம் தமிழக மக்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகத்துக்கு நான் வந்திருப்பதே, பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை என்ற கொள்கையை வலியுறுத்தத்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பரகலா பிரபாகரன், ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்கிறேன் என்றால், மாநிலத்தில் நாம் கொண்டாடி வரும் பல வாய்ப்புகள் முடிந்துபோகும். குறிப்பாக மத நல்லிணக்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்துக்கும் முடிவு கட்டுப்படும். சுதந்திரம், சமத்துவம் அனைத்தும் அழிக்கப்படும். பாஜகவுக்கு அளிக்கப்படும் வாக்கு, சமூக நீதிக்கான சாவு மணி. பாஜகவுக்கு வாக்களித்தால் அது பிரிவினையைத் தூண்டும் ஆயுதமாக மாறும்.

பாஜகவுக்கு வாக்களித்தால், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

அனைத்து மக்களும் ஒரு உறுதிமொழியை எடுங்கள், அதுதான், தேர்தல் முடிந்து உருவாகும் தமிழக சட்டப்பேரவை, ஒரு பாஜக எம்எல்ஏ-கூட இல்லாத பூஜ்யம் பாஜக என்ற நிலையை உருவாக்கும்வோம் என்பதை உறுதி செய்யுங்கள்.

பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிரான, அதன் ஆதிக்க விசாரணை அமைப்புகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எக்காரணம் கொண்டும் தமிழக பேரவைக்குள் பாஜகவை நுழைத்துவிடாதீர்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் பரகலா பிரபாகர்.

Summary

Union Minister Nirmala Sitharaman's husband Prabhakaran insisted that a BJP-free Tamil Nadu Assembly should be formed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.