ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மும்பை 20 மாடி கட்டட தீ விபத்து: 7 பேர் பலி

மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 7:30 am

DIN


மும்பை டார்டியோ பகுதியிலுள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"காந்தி மருத்துவமனை எதிரே உள்ள கமலா கட்டடத்தில் காலை 7 மணியளவில் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அது தரைதளம் மற்றும் 20 மாடிகளைக் கொண்ட கட்டடம். தீ விபத்து 18-வது மாடியில் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் நாயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 7 பேரில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். பாட்டியா மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா மருத்துவமனையில் தலா ஒருவர் உயிரிழந்துவிட்டனர்.

தற்போதைய நிலையில், பாட்டியா மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் நாயர் மருத்துவமனையிலும் ஒருவர் கஸ்தூரிபா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

மற்றோர் அதிகாரி இதுபற்றி கூறுகையில், "18-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டவுடன், குடியிருப்புவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேறத் தொடங்கினர். ஒவ்வொரு தளத்திலும் 7 குடியிருப்புகள் உள்ளன. 18 மற்றும் 19-வது மாடியில் நெருப்பு சூழ்ந்ததால் சிலர் அங்கேயே சிக்கிக்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் மின்சாரம் துண்டித்ததாக குடியிருப்புவாசிகள் சிலர் கூறினர். தீயை அணைக்கும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.