சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு.

சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்

சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்
இந்தியாவின் உயரமான மனிதராக கருதப்படும் தரமேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவரின் வருகை கட்சியை பலப்படுத்தும் என சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் நரேஷ் உத்தம் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள் மற்றும் அகிலேஷ் யாதவின் தலைமை மீது நம்பிக்கை தெரிவித்து, பிரதாப்கரை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் இன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், தர்மேந்திர பிரதாப் சிங்கின் வருகையால் சமாஜ்வாதி கட்சி வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | என்னாது இன்னொரு கரோனாவா...பிரிட்டனை அச்சுறுத்தும் புதிய வைரஸ்
சமாஜ்வாதியில் இணைந்தது குறித்து தரமேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "உயரத்தால் நான் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். நான் வெளியே செல்லும் போது எல்லாம் அதிக கவனத்தை ஈர்க்கிறேன். நான் மிகவும் பிரபலமாக இருக்கிறேன், எல்லாவற்றுக்கும் எனது உயரம் தான் காரணம்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...