மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மகாராஷ்டிரத்தில் 1-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

News image

கோப்புப் படம்.

Updated On :24 ஜனவரி 2022, 7:24 am

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

நாட்டில் கரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்படி மகாராஷ்டிர மாநிலத்திலும் பள்ளிகளுக்கு கடந்த மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு பள்ளி, கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவித்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை நேற்று மட்டும் புதிதாக 40,805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கடந்த 24 மணிநேரத்தில் 27,377 பேர் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 44 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.