இன்று நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு ஏலம்: ஆர்பிஐ

மத்திய ரிசர்வ் வங்கி, மாறிவரும் ரெப்போ விகிதத்துக்கு ஏற்ப, இந்திய வங்கிகளிலிருக்கும் கூடுதல் ரொக்கத்தை நேர்செய்யும் வசதியை (எல்ஏஎஃப்) பயன்படுத்தி மும்பையில் திங்கள்கிழமை நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு ஏல
இன்று நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு விஆர்ஆர் ஏலம் விடுகிறது ஆர்பிஐ
இன்று நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு விஆர்ஆர் ஏலம் விடுகிறது ஆர்பிஐ


மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி, மாறிவரும் ரெப்போ விகிதத்துக்கு ஏற்ப, இந்திய வங்கிகளிலிருக்கும் கூடுதல் ரொக்கத்தை நேர்செய்யும் வசதியை (எல்ஏஎஃப்) பயன்படுத்தி மும்பையில் திங்கள்கிழமை நள்ளிரவு ரூ.75,000 கோடிக்கு ஏலத்தை நடத்துகிறது.

திரும்பபெறும் தேதி ஜனவரி 25, 2022 என்று மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி நள்ளிரவில் ரூ.50,0000 கோடிக்கு  மாறிவரும் ரெப்போ விகித ஏலத்தை ரிசர்வ் வங்கி நடத்தி முடித்துள்ளது.

இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி கூறுகையில், இந்திய வங்கிகளிலிருக்கும் கூடுதல் ரொக்கத்தை நேர்செய்யும் வகையில் எவ்வித இடையூறும் இல்லாத முறையில், பொருளாதாரத்தின் முக்கியக் காரணியான உற்பத்தித் துறைக்குத் தேவையான ரொக்கப் பணப்புழக்கம் கிடைக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com