4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விருப்ப ஓய்வு அளித்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி பஞ்சாபில் பாஜக சார்பில் போட்டி

விருப்ப ஓய்வு கோரிய தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜக்மோகன் சிங் ராஜூ பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ஜக்மோகன் சிங் ராஜூ
Updated On :28 ஜனவரி 2022, 9:50 am

DIN

விருப்ப ஓய்வு கோரிய தமிழக மூத்த ஐஏஎஸ். அதிகாரிகளில் ஒருவரான ஜக்மோகன் சிங் ராஜூ பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வானவா் ஜக்மோகன் சிங் ராஜூ. பஞ்சாப் மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்ட அவா் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையாளராகப் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் விருப்ப ஓய்வு கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் ஜக்மோகன் சிங் ராஜூவுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜக்மோகன் சிங் ராஜூ நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக பாஜக வியாழக்கிழமை அறிவித்தது. இவர்களைத் தவிர சிரோமணி அகாலி தளத்தின் பிக்ரம் சிங் மஜிதியாவும் இந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார். 

பஞ்சாபில் பிப்ரவரி 20ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் எனவும் தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.