லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்.

News image
எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை (கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2022, 11:08 am

DIN

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவதியின் மகள் டாக்டர் சௌந்தர்யா(30). இவருக்கும் டாக்டர் நீரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. 

பெங்களூரு, வசந்த்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவர் டாக்டர் நீரஜுடன் டாக்டர் சௌந்தர்யா வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தனது கணவர் நீரஜ் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றதும், சௌந்தர்யா தனது அறையில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

நீண்டநேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டுவேலைக்காரர்கள், கதவை திறக்க முயன்றபோது, உள்ளிருந்து தாளிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வேலைக்காரர்கள், அவரது கணவருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவல் அறிந்ததும் வீட்டுக்கு வந்த நீரஜ், மனைவி சௌந்தர்யா இருந்த கதவை உடைத்து அறைக்குள் சென்றுள்ளார். அங்கு மின் விசிறியில் தூக்கிட்டு தனது மனைவி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகில் உள்ள மல்லிகே மருத்துவமனைக்கு சௌந்தர்யா எடுத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை மீட்க தீவிரமுயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது உயிரை மீட்க முடியாததால், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனைக்கு சௌந்தர்யா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவமனைக்கு சென்று தனது பேத்தி சௌந்தர்யாவின் உடலைக் கண்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்கலங்கினார். எடியூரப்பாவுக்கு முதல்வர் பசவராஜ்பொம்மை, அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.