தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உத்தரகண்ட் தேர்தல்: முதல்வர் தாமி வீடு வீடாகச் சென்று பிரசாரம்

உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியின் மெல்காட் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 

News image
Updated On :28 ஜனவரி 2022, 8:05 am

DIN

உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியின் மெல்காட் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 

மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், 

நான் உங்கள் மகன், உங்கள் சகோதரன், வரும் நாட்களில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் கேட்கப்படும் என்றார். 

மேலும், பிரதமர் மோடி தொடங்கிவைத்த அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களுக்காகவே உள்ளது. உத்தரகண்ட் வளர்ச்சிக்காக பாஜக செய்த அளவுக்கு வேறு எந்த கட்சியும் உழைக்கவில்லை என்று அவர் கூறினார். 

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி காதிமா சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.