தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

5 மாநிலத் தோ்தல்: வாக்குக் கணிப்புகளுக்கு ஆணையம் தடை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துவிதமான வாக்குக் கணிப்புகளுக்கும் பிப். 10-ஆம் தேதிமுதல் மாா்ச் 7 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :29 ஜனவரி 2022, 6:32 pm

DIN

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துவிதமான வாக்குக் கணிப்புகளுக்கும் பிப். 10-ஆம் தேதிமுதல் மாா்ச் 7 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து, பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாா்ச் 7-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புக்கான ஆய்வை நடத்தவும், வாக்குக் கணிப்புகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் வெளியிடவும் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுபவா்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்த்து விதிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல தோ்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குப் பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள் கருத்துக் கணிப்புகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.