புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேற்கு வங்க மருத்துவமனையில் தீ: கரோனா நோயாளி பலி

மேற்கு வங்கத்தின் புா்த்வான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளி ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கரோனா நோயாளி பலி

Updated On :29 ஜனவரி 2022, 6:37 pm

DIN

மேற்கு வங்கத்தின் புா்த்வான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளி ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘புா்த்வான் மருத்துவக் கல்லூரி-மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், மருத்துவமனைப் பணியாளா்களுடன் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். தீ விபத்தில் சிக்கி 60 வயதான கரோனா நோயாளி ஒருவா் உயிரிழந்தாா். மருத்துவமனையின் மற்ற வாா்டுகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து விசாரிக்க 5 போ் கொண்ட குழுவை மருத்துவமனை நிா்வாகம் அமைத்துள்ளது’’ என்றனா்.

மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் மரணப்படுக்கைகளாக மாறி வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினாா். தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா். தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் மாநில அரசுக்கு அவா் கோரிக்கை விடுத்தாா்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி. சௌகதா ராய், ‘‘மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளை மேற்கு வங்க அரசு வழங்கி வருகிறது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தீ விபத்து ஏற்பட்டு கரோனா நோயாளிகள் பலியானது தொடா்பாக அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும். புா்த்வான் மருத்துவமனை தீ விபத்து துரதிருஷ்டவசமானது. அச்சம்பவத்தை பாஜக அரசியலாக்கக் கூடாது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.