காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொய்யான காந்தி என்று கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தியின் கனவுகள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மட்டுமே நிஜமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பாஜகவை ஆதரித்து அமைச்சர் கிரிராஜ் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், ராகுல் காந்தி ஒரு பொய்யான காந்தி. நாட்டின் நலன் குறித்த காந்தியின் கனவுகள் பாஜக ஆட்சியின் நனவாக்கப்பட்டு வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மாநில வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


