இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது.
இந்தியாவின் இந்த உதவியின் மூலம் நேபாளம் அதன் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட முடியும். நேபாளத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா இந்த வாகனங்களின் சாவிகளை நேபாள அரசின் கல்வித் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தேவேந்திர பௌடலிடம் ஒப்படைத்தார்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியுள்ளது இரு நாட்டின் உறவினை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இது குறித்து இந்தியத் தூதர் கூறியதாவது: “இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக நீண்ட காலமாக நேபாளத்திற்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளில் இந்த முயற்சியும் ஒன்றாகும். மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் நேபாளம் சிறந்து விளங்க இந்த முயற்சி உதவியாக இருக்கும்.” என்றார்.
கடந்த ஆண்டு கரோனா பேராபாத்துக் காலத்தின்போது இந்தியா சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்களை நேபாளத்திற்கு வழங்கியது. அதேபோல கடந்த 2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளில் 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
தனுஷ் நடிப்புப் பல்கலைக்கழகம்: மமிதா பைஜூ

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்

பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


