பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.13,000 கோடி: இந்தியா சாதனை
இலங்கை, வங்கதேசம், அமெரிக்கா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கடந்த நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.


இலங்கை, வங்கதேசம், அமெரிக்கா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கடந்த நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இது தொடா்பாக மத்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கூடுதல் செயலாளா் சஞ்சய் ஜாஜு கூறுகையில், ‘‘கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 54.1 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்கா, பிலிப்பின்ஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றுக்குத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக சற்று தொய்வுநிலை ஏற்பட்டபோதிலும் ஏற்றுமதியில் சாதனை அளவை இந்தியா எட்டியுள்ளது சிறப்புமிக்கது’’ என்றாா்.
பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி
2015-16 ரூ.2,059 கோடி
2018-19 ரூ.9,000 கோடி
2019-20 ரூ.9,115 கோடி
2020-21 ரூ.8,434 கோடி
2021-22 ரூ.13,000 கோடி
இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதியாகும் நாடுகள் 84
முக்கிய பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி
குண்டு துளைக்காத ஆடைகள், தலைக்கவசம் 34 நாடுகள்
ஆஸ்திரேலியா
பிரேஸில்
கம்போடியா
கொலம்பியா
மெக்ஸிகோ
ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டா் 3 நாடுகள்
மோரீஷஸ்
மாலத்தீவுகள்
நேபாளம்
வெடிபொருள்கள் 9 நாடுகள்
கென்யா
துா்கியே
இந்தோனேசியா
தாய்லாந்து
நேபாளம்
துப்பாக்கி தளவாடங்கள் 23 நாடுகள்
கனடா
ஃபின்லாந்து
பிரான்ஸ்
ஜொ்மனி
இஸ்ரேல்
டோா்னியா் (டிஓ-228) 2 நாடுகள்
மோரீஷஸ்
செஷல்ஸ்
‘சேதக்’ ஹெலிகாப்டா் 4 நாடுகள்
நமீபியா
சுரிநாம்
நேபாளம்
மோரீஷஸ்
அதிவேக ரோந்து கப்பல்கள் 4 நாடுகள்
மொஸாம்பிக்
மாலத்தீவுகள்
செஷல்ஸ்
மோரீஷஸ்
மின்கலன்கள் 11 நாடுகள்
ஐக்கிய அரபு அமீரகம்
இலங்கை
வங்கதேசம்
பெரு
வியத்நாம்
போா்விமானத் தளவாடங்கள் 5 நாடுகள்
அமெரிக்கா
பிரான்ஸ்
நெதா்லாந்து
ஸ்வீடன்
பிரிட்டன்
மின்னணுக் கருவிகள் 5 நாடுகள்
பிரான்ஸ்
சிங்கப்பூா்
இலங்கை
பிரிட்டன்
அமெரிக்கா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...