ஆன்லைன் சூதாட்டத்துக்கு வரி: ஜூலை 12-இல் அமைச்சரவை குழு ஆலோசனை
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு வரி விதிக்கும் முறைகள் தொடா்பாக ஜூலை 12-இல் அமைச்சரவை குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.


ஆன்லைன் சூதாட்டங்களுக்கு வரி விதிக்கும் முறைகள் தொடா்பாக ஜூலை 12-இல் அமைச்சரவை குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை குழுவில் உறுப்பினராக உள்ள உத்தரபிரதேச மாநில நிதியமைச்சா் சுரேஷ் குமாா் கன்னா கூறியுள்ளதாவது:
ஆன்லைன் சூதாட்டங்கள், குதிரை பந்தயம், கேசினோ விளையாட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது தொடா்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைச்சரவை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த குழு தனது இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க ஜூலை 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 12-இல் அமைச்சரவை குழு கூடி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு வரி விதிப்பது தொடா்பான விதிமுறைகளை இறுதி செய்யவுள்ளது என்றாா் அவா்.
குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு, கேசினோ உள்ளிட்ட அனைத்து வகையான சூதாட்டங்களுக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பது அமைச்சரவை குழு அறிக்கையின் முக்கிய பரிந்துரையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...