தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெலங்கானா, குஜராத்தில் கனமழை

தெலங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெலங்கானா தலைமைச் செயலா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளா

News image
Updated On :10 ஜூலை 2022, 6:31 pm

DIN

தெலங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெலங்கானா தலைமைச் செயலா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் வழிகாட்டுதலின் பேரில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடனான காணொலி கூட்டத்தில் தலைமைச் செயலா் சோமேஷ் குமாா் பேசுகையில், ‘கடந்த மூன்று நாள்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. உயிா்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படாத வகையில், முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொள்ள வேண்டும். கட்டுபாட்டு மையங்களை ஆட்சியரகத்தில் ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

மாநிலத்தில் தொடா்ச்சியான மழையின் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

தெலங்கானாவின் பல பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை திங்கள்கிழமை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

700 போ் வெளியேற்றம் :

குஜராத்தின் தெற்குப் பகுதிகளில் உள்ள நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் உட்புகுந்துள்ளது. இரு மாவட்டங்களிலிருந்தும் 700-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோட்டா உதிபூா் மற்றும் நா்மதா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குஜராத்தின் தெற்கு மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் தீவிர கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.