
நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எப்படி பதவிறக்கம் செய்வது?
1. neet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
2. முகப்புப் பக்கத்தில் "Download Admit Card for NEET (UG)- 2022 is Live Now" என்பதை கிளிக் செய்யவும்.
3. அதில், உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பின் எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
4. திரையில் உங்களது நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு தோன்றும்.
5. அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டின் பின்புறம், நீட் தேர்வு மற்றும் அதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு நாடு முழுவதும் 18,72,339 போ் விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2,57,562 கூடுதலாகும். தமிழகத்தில் மட்டும் 1,42,286 போ் விண்ணப்பித்துள்ளனா். நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ள 497 நகரங்களின் விவரம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
மாணவா்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் என்டிஏ மின்னஞ்சல் முகவரியையோ 011-40759000 என்ற உதவி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.