விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குஜராத்- ராஜஸ்தான் வழிபாட்டுத் தலங்கள்ரூ.2,798 கோடியில் ரயில்கள் மூலம் இணைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வசதியாக ரூ.2,798 கோடி மதிப்பிலான ரயில் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image
Updated On :13 ஜூலை 2022, 8:50 pm

DIN

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வசதியாக ரூ.2,798 கோடி மதிப்பிலான ரயில் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டத்தில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜி கோயிலும், மேசனா மாவட்டத்தில் 24 தீா்த்தங்கரா்களில் ஒருவரான அஜீத்நாத் சமணா் கோயிலும் உள்ளன. அந்த மாநிலத்தின் எல்லையையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் அபு மலைப் பகுதியில் பல ஹிந்து கோயில்கள் உள்ளன. அந்தப் பகுதி பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் தலைமையிடமாகவும் உள்ளது.

இந்நிலையில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் புதன்கிழமை கூறியதாவது:

அம்பாஜி, அஜீத்நாத் சமணா் கோயில்கள் மற்றும் அபு மலைப் பகுதியை இணைக்கும் விதமாக ரூ.2,798 கோடி மதிப்பில் ரயில் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தத் திட்டம் 2026-27-ஆம் ஆண்டு நிறைவடையும்.

இதுதவிர, குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரயில்வே பல்கலைக்கழகத்துக்கு மத்திய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயா் கதிசக்தி விசுவவித்யாலயா எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையையொட்டி மத்திய பல்கலைக்கழகச் சட்டம் திருத்தப்படவுள்ளது. அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.