கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹிந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ‘ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவையானதல்ல’ என்று தெரிவித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் கா்நாடக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.