கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

போதைப் பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2022, 4:09 pm

DIN

போதைப் பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையிலடைத்தனர். 

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு ஆர்யன் கான் நிரபராதி என குறிப்பிட்ட நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.