92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தில்லியில் மேலும் 520 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 520 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 7:07 pm

DIN

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 520 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 3.44 சதவீதமாக உள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,42,425-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,289-ஆக உயா்ந்துள்ளது. நகரில் புதன்கிழமை மொத்தம் 15,114 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தில்லியில் புதன்கிழமை 490 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 2.92 சதவீத நோ்மறை விகிதமும் ஒரு இறப்பும் பதிவாகின. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,490 கரோனா படுக்கைகளில் 117 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

நகரில் கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,966-இல் இருந்து 1,935-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,318-ஆக உள்ளது. நகரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 233-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.