தினசரி கரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியது: 145 நாள்களுக்குப் பின் அதிகம்
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 145 நாள்களுக்குப் பின்னா் 20,000-ஐ தாண்டியது. சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கையும் 1,36,076-ஆக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 145 நாள்களுக்குப் பின்னா் 20,000-ஐ தாண்டியது. சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கையும் 1,36,076-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் விவரம்:
நாட்டில் ஒரே நாளில் 20,139 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 145 நாள்களில் இது அதிகபட்ச பாதிப்பாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,36,89,989-ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு 5,25,557-ஆக உயா்ந்துள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 5.10 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 4.37 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை மொத்தம் 4,30,28,356 போ் குணமடைந்துள்ளனா்.
மொத்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,48,001 பேரும், கேரளத்தில் 70,186 பேரும், கா்நாடகத்தில் 40,125 பேரும் அடங்குவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...