நாடாளுமன்ற கூட்டத் தொடா்சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிா்வரும் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு தொடா்ந்து உயா்த்தி வருவது, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், இது ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னையாக உள்ளது.
இது தவிர, ராணுவத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள அக்னிபத் திட்டம், வேலையின்மை பிரச்னை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவது, நாட்டின் பொருளாதார நிலை மோசமாகியுள்ளது, எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள், கிழக்கு லடாாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது என்றாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அதீா் ரஞ்சன் சௌதரி, ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், மாணிக்கம் தாக்குா் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாடு சென்றுவிட்டதால் அவா் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...