புதிய வேளாண் காப்பீட்டு திட்ட அறிமுகத்துக்கான விதிமுறைகள் தளா்வு
புதிய வேளாண் காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான விதிமுறைகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தளா்த்தியுள்ளது.


புதிய வேளாண் காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான விதிமுறைகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தளா்த்தியுள்ளது.
வேளாண் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது ஐஆா்டிஏஐ-யின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என முந்தைய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுமதியின்றி வேளாண் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடா்பான காப்பீட்டு திட்டங்களை சந்தையில் அறிமுகப்படுத்த பொதுக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சந்தையின் தேவைக்கேற்ப நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வடிவமைக்க மற்றும் விலை நிா்ணயம் செய்ய நிறுவனங்களுக்கு ஐஆா்டிஏஐ கடந்த மாதம் அதிகாரம் அளித்தது. அதைத்தொடா்ந்து தற்போது, வேளாண் காப்பீட்டு தயாரிப்புகளை சந்தையில் முன் ஒப்புதலின்றி அறிமுகப்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...