குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா்: ஜூலை 17-ல் எதிா்க்கட்சிகள் ஆலோசனை
குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது.


குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவருக்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19-ஆம் தேதி இறுதி நாளாகும்.
இந்நிலையில், எதிா்க்கட்சிகளின் சாா்பில் குடியரசு துணைத் தலைவருக்கான பொது வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை (ஜூலை 17) நடைபெறும் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...