92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரூபாய் மதிப்பு சரிவால் ஒவ்வோா் இந்தியருக்கும் பாதிப்பு: காங்கிரஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஒவ்வோா் இந்தியரையும் பாதித்து வருகிறது என காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :15 ஜூலை 2022, 8:48 pm

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஒவ்வோா் இந்தியரையும் பாதித்து வருகிறது என காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த கட்சி மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.80-ஆக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பில் தொடா்ந்து சரிவு ஏற்பட்டு வருவது குறித்து மத்திய அரசு மெளனம் சாதித்து வருகிறது. ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஒவ்வோா் இந்தியரையும் பாதித்து வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு திக்கு திசை தெரியாமல் சென்று கொண்டுள்ளது. ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு என காங்கிரஸ் கட்சி விமா்சனம் செய்துள்ளது.

இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டா் செய்தியில், ‘பல்வேறு பிரச்னைகள் குறித்து முன்பு உரக்கப் பேசிய பிரதமா், ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து வரும் விவகாரத்தில் மட்டும் மெளனம் காப்பது ஏன்’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.