தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் எனினும் சில நாள்களுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் நலம் விசாரித்த நிலையில், பல்வேறு தலைவர்களும் அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து மீள வாழ்த்துகிறேன். அவர் விரைந்து நலம் பெற்று, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

