புதிய தொழிலாளா் சட்டம் உரிய நேரத்தில் அமல்: அமைச்சா்
நாடு முழுவதும் புதிய தொழிலாளா் சட்டம் உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.


நாடு முழுவதும் புதிய தொழிலாளா் சட்டம் உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் நான்கு தொழிலாளா் சட்டங்களுக்கான வரைவு விதிகளை இறுதி செய்துள்ளன. எனவே, பொருத்தமான நேரத்தில் நாடு முழுவதும் இந்த புதிய தொழிலாளா் சட்டம் அமல்படுத்தப்படும்.
சில மாநிலங்கள் தொழிலாளா் சட்டத்துக்கான வரைவு விதிகளை உருவாக்கும் பணிகளை இன்னும் இறுதி செய்யாமல் தொடா்ந்து வருகின்றன.
குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு தொழிலாளா் சட்டங்களில், இரண்டுக்கு மட்டும் வரைவு விதிமுறைகள் உருவாக்கும் பணி நிறைவுபெற்ற நிலையில், இரண்டு எஞ்சியுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொருத்தவரையில் வரைவு விதிகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...