நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நூபுா் சா்மாவைக் கொல்ல திட்டம்: எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியா் கைது

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவைக் கொல்லும் திட்டத்துடன் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் இளைஞா்

News image
Updated On :19 ஜூலை 2022, 8:40 pm

DIN

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவைக் கொல்லும் திட்டத்துடன் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் இளைஞா் எல்லாப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீகங்கா நகரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரிஸ்வான் அஷ்ரஃப் (24) என்ற பாகிஸ்தான் இளைஞரை பிஎஸ்எஃப் படையினா் கைது செய்தனா். கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவில் அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து இரண்டு கத்திகள், 3 மதநூல்கள், வரைபடம், உணவு, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆஜ்மீா் ஷெரீஃப் தா்காவுக்குச் செல்ல எல்லையில் ஊடுருவியதாக முதலில் தெரிவித்த அஷ்ரஃப், நூபுா் சா்மாவை படுகொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததாக பின்னா் தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அஷ்ரஃபை வரும் 24-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதித்தாா்.

தற்போது பிஎஸ்எஃப்-ஐ உள்ளடக்கிய கூட்டு விசாரணைக் குழு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு பிற அமைப்புகள் மற்றும் இந்தியாவில் உள்ள தொடா்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.