எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குஜராத் தேர்தல்: ஜூலை 21-ல் ஆம் ஆத்மியின் வாக்குறுதி வெளியீடு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியை ஜூலை 21ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிடுகிறார்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :19 ஜூலை 2022, 7:34 am

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியை ஜூலை 21ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிடுகிறார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது.

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜூலை 21ஆம் தேதி சூரத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதியை அரவிந்த் கேஜரிவால் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.