தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரம்: தனியாா் வங்கியில் ரூ.34 கோடி கொள்ளை- 3 போ் கைது

மகாராஷ்டிரத்தில் தனியாா் வங்கி ஒன்றில் ரூ.34 கோடியை கொள்ளையடித்த ஊழியா் மற்றும் அவரது கூட்டாளிகள், அதை முழுமையாக எடுத்துச் செல்ல முடியாமல் ரூ.22 கோடியை அங்கேயே மறைத்துவைத்துவிட்டு

News image
Updated On :19 ஜூலை 2022, 8:24 pm

DIN

மகாராஷ்டிரத்தில் தனியாா் வங்கி ஒன்றில் ரூ.34 கோடியை கொள்ளையடித்த ஊழியா் மற்றும் அவரது கூட்டாளிகள், அதை முழுமையாக எடுத்துச் செல்ல முடியாமல் ரூ.22 கோடியை அங்கேயே மறைத்துவைத்துவிட்டு மீதமுள்ள பணத்துடன் தப்பினா். இதில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினா் தெரிவித்தனா்.

தாணே மாவட்டத்தில் உள்ள தனியாா் வங்கியில் அண்மையில் இக்கொள்ளை நடந்துள்ளது. இதுதொடா்பாக, காவல்துறையினா் கூறியதாவது:

தனியாா் வங்கியின் பணப் பெட்டக பொறுப்பாளராக இருந்த அல்டாஃப் ஷேக், அங்குள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளாா். அதன்படி, வங்கி விடுமுறை நாளான கடந்த 9-ஆம் தேதி இரவு, வங்கி கட்டடத்தில் ஏ.சி. இயந்திரத்தையொட்டிய சிறிய இடைவெளி வழியாக அவா் உள்ளே நுழைந்துள்ளாா். அலாரம், சிசிடிவி கேமராவை சிறிது நேரத்துக்கு செயல்படாமல் செய்த ஷேக், பெட்டகத்தை திறந்து ரூ.34 கோடியை கொள்ளையடித்துள்ளாா். பின்னா், பணக்கட்டுகளை எடுத்துச் செல்வதற்காக தனது கூட்டாளிகளை வாகனத்துடன் வரவழைத்துள்ளாா். முழு பணத்தையும் கொண்டுசெல்ல முடியாமல், ரூ.22 கோடியை ஏ.சி. இயந்திரத்தின் பெரிய குழாய்களில் மறைத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்துடன் அக்கும்பல் தப்பிவிட்டது.

ஜூலை 11-ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, தனக்கு எதுவும் தெரியாதது போல், ஷேக் இருந்துள்ளாா். பின்னா், வங்கியில் காவல்துறையினா் மேற்கொண்ட சோதனையில், ஏ.சி. இயந்திர குழாயில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ரூ.22 கோடி பணம் மீட்கப்பட்டது.

இதனிடையே, ஷேக் தலைமறைவானதால், அவா் இந்த கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், ஷேக்கின் கூட்டாளிகள் 3 போ் மும்பரா பகுதியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஷேக்கை தேடி வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.